அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கல்வித் தொலைக்காட்சி இணையதளம் குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் எழும் பொதுவான கேள்விகள்.

ஆம். கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை பார்க்கத் தவறியவர்களுக்காக, கல்வித் தொலைக்காட்சி இணையதளம், Tn e-learn, TNTP, கல்வித் தொலைக்காட்சியின் YouTube சேனல் வாயிலாகவும் மேற்கண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து பயன்பெறலாம்.

  • ஆம். இயலும்.
  • படிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்காக, வினாக்களை இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.
  • கல்வித் தொலைக்காட்சியின் மின்னஞ்சலிலும் மேற்காண் கேள்விகளை பதிவு செய்யலாம்.
  • இவ்வாறு பலரிடமிருந்து பெறப்படும் வினாக்களை தொகுத்து, வாராவாரம் சனிக்கிழமைகளில் பாடவாரியாக கல்வித்தொலைக்காட்சியில் வினா – விடை (Q & A) நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இதன் மூலம் பயனடையலாம்.

  • ஆம்
  • கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வீட்டுப் பள்ளியாக கருதப்படுகிறது.
  • முறையான பள்ளி நேரத்தில் வகுப்புகள் எவ்வாறு பாடவாரியாக, தலைப்புவாரியாக, அலகு வாரியாக நடத்தப்படுமோ, அதே வகையில் பாடங்கள், காணொளி காட்சியாக வரிசைக்கிரமமாக ஒளிபரப்பப்படும்.

  • ஆம்.
  • Standardised Time table – முறைப்படுத்தப்பட்ட ஒளிபரப்பு பட்டியல் – பள்ளியில் பின்பற்றப்படும் கால அட்டவணைப் போன்று, இணைப்பிலுள்ளவாறு வெளியிடப்படும்.