கல்வித் தொலைக்காட்சி
2017-18 ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது சட்டமன்றப் பேரவையில் அறிவித்தபடி தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் மையப்படுத்தப்பட்ட படப்பதிவு நிலையமாக கல்வித் தொலைக்காட்சி மிக நவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது.
1. மனித வளம் உயர்ந்தோங்க நாளைய சமுதாயம் நிறைவடைய தொலைகாட்சிகளில் முன்னோடியாக உலகளவில் முதன்முறையாக கல்வித் துறை கல்வியாளர்கள் உருவாக்கிய கல்விக்கென சிறப்பு தொலைக்காட்சி தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி.
2. தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் டிஜிட்டல் வழி- கல்விக்கான கல்வி
3. மழலையர் முதல் முதல்நிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குகிறது கல்வித் தொலைக்காட்சி